கள மேற்பார்வையாளர், அமலாக்க உதவியாளர் பணிகளுக்கு 22-ந் தேதி எழுத்து தேர்வு


கள மேற்பார்வையாளர், அமலாக்க உதவியாளர் பணிகளுக்கு 22-ந் தேதி எழுத்து தேர்வு
x

புதுச்சேரியில் வருகிற 22-ந் தேதி கள மேற்பார்வையாளர் மற்றும் அமலாக்க உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடக்கிறது.

புதுச்சேரி

புதுச்சேரியில் வருகிற 22-ந் தேதி கள மேற்பார்வையாளர் மற்றும் அமலாக்க உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடக்கிறது.

இது குறித்து அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை தேர்வு பிரிவு சார்பு செயலர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உதவியாளர் பணியிடம்

புதுச்சேரி பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்குனரகத்தில் கள மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு வருகிற 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் 12 மணி வரை நடக்கிறது.

அதேபோல் புதுச்சேரி போக்குவரத்து துறையில் அமலாக்க உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு மதியம் 2.30 மணி முதல் 4.30 வரை புதுச்சேரியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைனில் பதிவிறக்கம்

இந்த தேர்வுக்களுக்கான அனுமதி சீட்டினை தேர்வர்கள் https://recruitment.py.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுதொடர்பாக ஏதேனும் விவரம் அல்லது உதவி தேவைப்பட்டால் தேர்வர்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story