இளம்பெண் தற்கொலை


இளம்பெண் தற்கொலை
x

காலாப்பட்டு அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காலாப்பட்டு

புதுவையை அடுத்த பெரிய காலாப்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகள் இலக்கியா (வயது 18). இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு வந்த ஜெயக்குமார் தனது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே இலக்கியா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story