முதல்-அமைச்சர் ரங்கசாமி வீட்டின் முன்பு திரண்ட இளைஞர்கள்


முதல்-அமைச்சர் ரங்கசாமி வீட்டின் முன்பு திரண்ட இளைஞர்கள்
x

அரசு துறைகளில் உதவியாளர் பணியிடங்களை நிரப்பக்கோரி புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வீட்டின் முன்பு இளைஞர்கள் திரண்டனர்

புதுச்சேரி

புதுச்சேரி அரசு துறைகளில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று மாலை முதல்-அமைச்சர் ரங்கசாமி சந்தித்து தங்களது கோரிக்கை மனு கொடுக்க புதுவை கோரிமேட்டில் உள்ள முதல்-அமைச்சர் வீட்டின் முன்பு திரண்டனர். இதனையடுத்து முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து இளைஞர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து முறையிட்டனர்.

அப்போது அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 259 காலிபணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். மேல்நிலை, கீழ் நிலை எழுத்தருக்கான போட்டித்தேர்வும் யு.டி.சி. காலிபணியிடங்களான 116 இடங்களையும் அடுத்த மாதம் இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்சாமி உறுதி அளித்தார். இதை ஏற்று இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

-------


Next Story