நோ பார்க்கிங்கில் நிறுத்திய அரசு பஸ்சுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்


நோ பார்க்கிங்கில் நிறுத்திய அரசு பஸ்சுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்
x
தினத்தந்தி 23 May 2024 4:12 PM GMT (Updated: 23 May 2024 4:20 PM GMT)

சென்னை- புதுச்சேரி பஸ் தாம்பரத்தில் 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றியதற்காக, தாம்பரம் போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம் விதித்தனர்.

சென்னை,

திருநெல்வேலியில், பணி நிமித்தமாக நாங்குநேரி வந்த போலீஸ்காரர், அரசு பஸ்சில் டிக்கெட் எடுக்க மறுத்ததால், கண்டக்டருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், போலீசார் சீருடையில் கோர்ட் உள்ளிட்ட நீண்ட தூரம் செல்லும் போது, சம்பந்தப்பட்ட ஸ்டேஷன்களில் வாரன்ட் கடிதத்துடன் செல்ல வேண்டும்' என்பதும் உத்தரவாக உள்ளது. எனவே, நேற்றைய சம்பவம், போக்குவரத்து துறைக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் போக்கை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், சென்னை- புதுச்சேரி பஸ் தாம்பரத்தில் 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றியதற்காக, தாம்பரம் போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம் விதித்தனர். சென்னையில் 'நோ பார்க்கிங்'-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் அரசுப்போக்குவரத்து துறைக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது போல இருப்பதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பரபரப்பாக பதிவிட்டு வருகிறார்கள்.


Next Story