அண்ணா பிறந்தநாள் - அ.தி.மு.க.வினருக்கு அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி


அண்ணா பிறந்தநாள் - அ.தி.மு.க.வினருக்கு அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 10 Sept 2024 8:34 PM IST (Updated: 11 Sept 2024 6:05 PM IST)
t-max-icont-min-icon

அண்ணா பிறந்தநாளையொட்டி, அவரது உருவச்சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

சென்னை,

அ.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாளான 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா உருவச்சிலைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

நிகழ்ச்சியில், மாவட்டக்கழக செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story