மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் - தமிழக அரசு உத்தரவு

கோப்புப்படம்
திட்டங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்த மற்றும் கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் பிறப்பித்த உத்தரவில், சிறப்பு திட்ட அமலாக்கத் துறையால் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுறுத்தல்களின்படி கண்காணிப்பு அதிகாரிகள் மாவட்டங்களை மதிப்பாய்வு செய்வார்கள். மாதம் ஒருமுறை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மற்றும் மதிப்பாய்வுகள் உறுதி செய்ய வேண்டும். கண்காணிப்பு அதிகாரிகள் சிறப்பு திட்ட அமலாக்கத் துறைக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






