நடிகை குட்டி பத்மினிக்கு எதிரான வழக்கு ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு


நடிகை குட்டி பத்மினிக்கு எதிரான வழக்கு ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 29 Jun 2024 6:50 PM IST (Updated: 29 Jun 2024 6:59 PM IST)
t-max-icont-min-icon

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்றதாக நடிகை குட்டி பத்மினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.

சென்னை,

சென்னை மடிப்பாக்கத்தில், ரமேஷ் என்பவருக்கு சொந்தமான சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபு பாஷா என்பவரின் மனைவி இம்ரானா என்பவருக்கு விற்றதாக கூறி, பா.ஜ.க. நிர்வாகியும், நடிகையுமான குட்டி பத்மினிக்கு எதிராக, கடந்த 2011-ம் ஆண்டு மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் இறுதி அறிக்கையை தயார் செய்துள்ள நிலையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டில் குட்டி பத்மினி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், நிலத்தின் உரிமை தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கக் கூடிய நிலையில், உரிமையியல் தொடர்பான இந்த வழக்கை குற்றவியல் வழக்காக விசாரிக்க முடியாது எனக்கூறி நடிகை குட்டி பத்மினிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

1 More update

Next Story