சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்


சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்
x
தினத்தந்தி 26 July 2024 3:42 PM IST (Updated: 26 July 2024 4:22 PM IST)
t-max-icont-min-icon

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கர், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் உயர் போலீஸ் அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோவை 'சைபர் கிரைம்' போலீசார் அவர் மீது முதல் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை கோவை 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சவுக்கு சங்கர் தரப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சரவணபாபு, சவுக்கு சங்கருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

1 More update

Next Story