கோட் படத்தின் சிறப்பு காட்சி: முக்கிய திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு


கோட் படத்தின் சிறப்பு காட்சி: முக்கிய திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 5 Sept 2024 8:33 AM IST (Updated: 5 Sept 2024 8:59 AM IST)
t-max-icont-min-icon

தி கோட் படத்துக்கு இன்று ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை,

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் உலகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) திரைக்கு வருகிறது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு வெளிமாநிலங்களில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 'தி கோட்' படத்துக்கு இன்று ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் தமிழக தியேட்டர்களில் சிறப்பு காட்சியுடன் அதிக பட்சம் ஐந்து காட்சிகள் திரையிடலாம் என்றும், முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி கடைசி காட்சியை நள்ளிரவு 2 மணிக்குள் முடிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஜய்யின் தி கோட் திரைப்படத்தின் சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட உள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூட்டத்தை கட்டுபடுத்தவும், அசாம்பாவிதங்களை தவிர்க்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உதவி ஆணையர்கள் மேற்பார்வையில், 3 காவல் ஆய்வாளர்கள் தலைமையில், 6 உதவி ஆய்வாளர்கள் உட்பட 30 மேற்பட்ட காவல்துறையினர் ஒவ்வொரு திரையரங்கிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

1 More update

Next Story