ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது குண்டாஸ்


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது குண்டாஸ்
x
தினத்தந்தி 12 Oct 2024 11:41 PM IST (Updated: 13 Oct 2024 11:05 AM IST)
t-max-icont-min-icon

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி அன்று படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 27 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில் ரவுடி திருவேங்கடம் மட்டும் போலீசாரின் என்கவுன்டருக்கு பலியானார். இந்த வழக்கில் கைதான 25 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி புதூர் அப்பு கடந்த மாதம் 21-ந்தேதி அன்று டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் அருண் பிறப்பித்துள்ளார். ஏற்கெனவே 25 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் ரவுடி அப்பு மீதும் குண்டாஸ் பாய்ந்தது.

ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் குற்றப்பத்திரிகை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பிரபல ரவுடி சம்போ செந்தில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பதும், தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story