நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்


நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
x

கோப்பு படம்

தினத்தந்தி 1 Oct 2024 2:28 AM GMT (Updated: 1 Oct 2024 5:16 AM GMT)

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் ரஜினிகாந்த், விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று முதல் அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 10ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனை தொடர்ந்து கூலி என்ற படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.லேசான நெஞ்சு வலி மற்றும் வயிற்றில் ஏற்பட்ட அசவுகரியம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருக்கு மருத்துவமனையில் தற்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story