மற்ற கட்சித்தலைவர்களையும் மதிக்க வேண்டும் - விஜய்க்கு தமிழிசை அறிவுரை
மற்ற கட்சிகளையும், அதன் தலைவர்களையும் மதிக்க வேண்டுமென தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு பா.ஜனதா மூத்த தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை கமலாலயத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
காந்தியை விமர்சித்த பிறகும் திருமாவளவனை காங்கிரஸ் கூட்டணியில் வைத்திருப்பது ஏன்? என்றால், காங்கிரசை பொறுத்தவரை மகாத்மா காந்தியை விமர்சித்தால் கண்டுகொள்ள மாட்டார்கள். சோனியா காந்தியையோ, ராகுல்காந்தியையோ விமர்சித்தால் மட்டுமே காங்கிரசார் துள்ளிக்குதிப்பார்கள்.
விஜய் தனது மாநாட்டு கடிதத்தில் மற்ற கட்சிகளைப் போல் நாம் சாதாரண கட்சி அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். எத்தனையோ ஆண்ட கட்சிகள், ஆளும் கட்சிகள் பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கின்றன. உங்கள் கட்சியை உயர்வாக சொல்வதில் தவறில்லை அதே நேரத்தில் மற்ற கட்சிகளையும், அதன் தலைவர்களையும் மதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story