1 லட்சம் சரவெடி: 4.12 நிமிடங்களுக்கு இடைவிடாமல் கேட்ட பட்டாசு சத்தம்


1 லட்சம் சரவெடி: 4.12 நிமிடங்களுக்கு இடைவிடாமல் கேட்ட பட்டாசு சத்தம்
x

10 குடும்பத்தினரும் தலா 10 ஆயிரம் சரவெடி வாங்கினர். அதனை ஒன்றாக சேர்ந்து 1 லட்சம் சரவெடியாக்கி வெடித்தனர்

கடலூர்,

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதுபோல் தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். புத்தாடை அணிந்து, பலகாரங்கள் செய்தும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர். அதுபோல் கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி தாலுகா கோதண்டராமபுரத்தை சேர்ந்த 10 குடும்பத்தினர் ஒன்றாக சேர்ந்து வித்தியாசமான முறையில் பட்டாசு வெடித்தனர்.

10 குடும்பத்தினரும் தலா 10 ஆயிரம் சரவெடி வாங்கினர். அதனை ஒன்றாக சேர்ந்து 1 லட்சம் சரவெடியாக்கி வெடித்தனர். இதனால் பட்.. படார்... படார்.... என பட்டாசு வெடித்து சிதறியது. சுமார் 4 நிமிடங்கள் 12 வினாடிகள் இடைவிடாமல் பட்டாசு வெடி சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதனை சிலர் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ வைரலாகி காண்போரின் கண்களுக்கு விருந்தளித்து வருகிறது. இ்ந்த வீடியோவை பார்த்த பலரும் இது தான்யா தீபாவளி கொண்டாட்டம் என கூறினர்.

1 More update

Next Story