ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 10 பவுன் நகை திருட்டு


ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 10 பவுன் நகை திருட்டு
x

பெண்ணின் பையில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

நெல்லை,

மும்பையில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் சொந்த ஊருக்கு ரெயில்களில் பயணம் செய்து வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் பகுதியை சேர்ந்த பெண் நேற்று முன்தினம் நெல்லையில் இருந்து மராட்டிய மாநிலம் வழியாக ஜாம்நகர் செல்லும் ரெயிலில் பயணம் செய்தார். இந்த ரெயில் அன்று நள்ளிரவு மங்களூரு -உடுப்பி இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பெண்ணின் பையில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ரெயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகர், போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். பின்னர் அவர் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். உடுப்பி -மங்களூரு இடையே பயணிக்கும் தமிழ் பயணிகளிடம் இது போன்ற திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலர் புகார் அளிக்காமல் சென்று விடுகிறார்கள். எனவே இந்த தொடர் திருட்டை தடுக்கும் வகையில் ரெயில்வே பாதுகாப்பு படை, ரெயில்வே போலீசார் பெட்டிகளில் பயணிகளுக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

1 More update

Next Story