10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது


10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 28 April 2025 7:57 AM IST (Updated: 28 April 2025 12:15 PM IST)
t-max-icont-min-icon

சிறுமியின் பெற்றோர், உடனடியாக இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர்.

மதுரை,

மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி டேவிட்ராஜ் (வயது 30). உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர், உணவு டெலிவரிக்காக மதுரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆண்டனி டேவிட்ராஜை, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

1 More update

Next Story