கோவையில் காரை வழிமறித்து 1.25 கிலோ கிராம் தங்கம் கொள்ளை - 5 தனிப்படைகள் அமைப்பு

கோவையில் காரை வழிமறித்து 1.25 கிலோ கிராம் தங்கம் கொள்ளை -  5 தனிப்படைகள் அமைப்பு
x

5 பேர் கொண்ட கும்பல் அதிரடியாக காரை மறித்து தங்கக்கட்டிகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை,

கேரளாவை சேர்ந்த இருவர்கள் சென்னை சவுகார்பேட்டையில் இருந்து தங்கத்தை நகைகளாகவும், கட்டிகளாகவும் வாங்கி உள்ளனர். பின்னர் நேற்று சென்னையிலிருந்து கேரளாவிற்கு புறப்பட்டனர். இந்த நிலையில் காரில் கோவை வழியாக கேரளாவிற்கு சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது 5 பேர் கொண்ட கும்பல் ஒரு லாரியை பயன்படுத்தி திடீரென காரை வழிமறித்தனர். இதனையடுத்து காருக்குல் புகுந்து காரில் இருந்த இரண்டு பேரையும் மிரட்டி 1.25 கிலோ கிராம் தங்கக்கட்டிகள் , 2 சவரன் தங்கச்சங்கிலி மற்றும் ரூ. 60 ஆயிரம் ரொக்க பணத்தையும் பறித்துச்சென்றனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதிகளில் சிசிடிவி காட்சிகளை போலீசார் சோதனை செய்ததில் கொள்ளை கும்பல் பாதிக்கப்பட்டவர்களை சென்னையில் இருந்தே பின்தொடர்ந்து வந்ததாகவும், ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக பார்த்து திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது.

5 பேர் கொண்ட கும்பல் அதிரடியாக காரை மறித்து தங்கக்கட்டிகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story