தூத்துக்குடியில் 159 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்: டீ கடைக்காரர் கைது


தூத்துக்குடியில் 159 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்: டீ கடைக்காரர் கைது
x

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாளை ரோடு எப்.சி.ஐ. குடோன் அருகில் ஒரு டீ கடையில் சோதனையிட்டபோது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக அந்த டீ கடையை நடத்தி வரும், தூத்துக்குடி 3வது மைல், புதுக்குடியைச் சேர்ந்த செல்லசாமி மகன் செல்லப்பாண்டி (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 159 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், அதனை கொண்டு வந்த ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story