தூத்துக்குடியில் சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது: 128 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தூத்துக்குடியில் சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது: 128 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
Published on

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன் மற்றும் பேலீசார் நேற்று காலை ரேந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பேது முத்தையாபுரம் வடக்கு தெருவில் உள்ள டாஸ்மாக் கடை பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் சாக்குப்பையுடன் நின்று கெண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் சேதனை செய்தனர். அதில் அவர்கள் மது பாட்டில்கள் வைத்திருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் தாளமுத்துநகர் 1வது தெரு முனியசாமி மகன் விக்னேஸ் (வயது 32), திரவியபுரம் 2வது தெரு மகராஜா மகன் கருப்பசாமி(23) என்பதும், சட்ட விரேதமாக மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் பேலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 128 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கைது செய்யப்பட்ட விக்னேஷ் மீது சட்ட விரேதமாக மது விற்றதாக 2 வழக்குகளும், கருப்பசாமி மீது கஞ்சா, மது விற்பனை, அடிதடி வீடுபுகுந்து திருட்டு உட்பட 11 வழக்குகள் உள்ளதாக பேலீசார் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com