ஓட்டல் ஊழியரிடம் வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் கைது

ஊழியரிடம் செல்போன் மற்றும் ரூ.7ஆயிரம் ரொக்கத்தை 2 வாலிபர்கள் பறித்து சென்றனர்.
சென்னை,
சென்னை, எம்.ஜி.ஆர் நகர், பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் சப்ளையராக வேலை பார்த்து வருபவர் ரவிக்குமார். இவர் கடந்த 14-ந் தேதி அதிகாலை அதே பகுதி அண்ணா மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2பேர் முகவரி கேட்பது போல நடித்து ரவிக்குமாரின் கவனத்தை திசை திருப்பி அவரது சட்டை பையில் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூ.7ஆயிரம் ரொக்கத்தை பறித்து சென்றனர்.
இதுகுறித்து கே.கே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட சின்ன போரூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ்குமார் மற்றும் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story






