டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் - தமிழக அரசு ஆணை

டாஸ்மாக்கில் பணிபுரியும் 24,816 தகுதியுடைய நபர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) பணிபுரியும் பணியாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை (Ex-Gratia) வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்பேரில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் C மற்றும் D பிரிவு ஊழியர்கள் மற்றும் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளர்கள் 20 சதவீதம் வரை மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணை தொகை தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு வழங்கப்படும்.

இதன் அடிப்படையில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் பணிபுரியும் 24,816 தகுதியுடைய நபர்களுக்கு ரூ.40.62 கோடி செலவில் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

அரசின் இந்த நடவடிக்கை தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மிகவும் ஈடுபாட்டுடனும், ஊக்கத்துடனும் பணியாற்றுவதையும், எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதை உறுதி செய்திட வழிவகை செய்யும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com