நெல்லை வழியாக செல்லும் ரெயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் அறிவிப்பு


நெல்லை வழியாக செல்லும் ரெயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Jan 2026 6:56 AM IST (Updated: 23 Jan 2026 8:09 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு வழித்தடங்களில் செல்லும் ரெயில்கள், குறிப்பிட்ட சில ஊர்களில் நின்று செல்வதற்கு தெற்கு ரெயில்வே அனுமதி அளித்துள்ளது.

நெல்லை,

நெல்லை வழியாக இயக்கப்படும் ரெயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்

சென்னை- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 26-ந்தேதி முதல் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இரு மார்க்கத்திலும் கேரள மாநிலம் அம்பலாபுழா ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

மதுரை- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் செரியநாடு நிலையத்தில் நின்று செல்லும். நாகர்கோவில்- மும்பை சி.எஸ்.எம். டெர்மினல் ரெயில் ஜோலார்பேட்டை நிலையத்தில் இரு மார்க்கத்திலும் நின்று செல்லும். நாகர்கோவில் - கச்சிகுடா ரெயில் ராசிபுரத்தில் நின்று செல்லும். எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ரெயில் சிவகங்கையில் நின்று செல்லும். மதுரை -புனலூர் பாசஞ்சர் ரெயில் கடம்பூர், குழித்துறை மேற்கு, பாலராமபுரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

அந்தியோதயா

திருச்செந்தூர்- பாலக்காடு ரெயில் ஸ்ரீவைகுண்டத்தில் நிரந்தரமாக நின்று செல்லும். தூத்துக்குடி -பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் கொல்லூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். செங்கோட்டை -தாம்பரம் வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு செங்கல்பட்டு, சிவகங்கை, பேராவூரணி நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் -தாம்பரம் அந்தியோதயா ரெயிலுக்கு நாங்குநேரி, திருமங்கலம், மணப்பாறை ஆகிய 3 நிலையங்களில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

நெல்லை -புருலியா எக்ஸ்பிரஸ் ரெயில் ஆரணி ரோடு நிலையத்தில் நின்று செல்லும். கன்னியாகுமரி -ராமேஸ்வரம் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் பரமக்குடி நிலையத்தில் நின்று செல்லும். மறு மார்க்கத்தில் ராமேஸ்வரம் -கன்னியாகுமரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் வள்ளியூர் நிலையத்தில் நின்று செல்லும். நாகர்கோவில் -கோவை எக்ஸ்பிரஸ் இரு மார்க்கத்திலும் சாத்தூரில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story