தமிழகத்திற்கு மேலும் 3 அம்ரித் ரெயில்கள்...பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி


தமிழகத்திற்கு மேலும் 3 அம்ரித் ரெயில்கள்...பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி
x

 பயணிகளின் பயணநேரம் குறைக்கப்படும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்

சென்னை.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழகத்திற்குத் தித்திப்பான பொங்கல் பரிசு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. நமது மாநிலத்தின் உட்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக, தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்திற்கு இடையே 3 அம்ரித் பாரத் ரெயில்களை இயக்க ஒப்புதல் அளித்துள்ள நமது பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கும், மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நியூ ஜல்பாய்குரி - திருச்சி, தாம்பரம் - சந்திரகாச்சி, நாகர்கோவில் - நியூ ஜல்பாய்குரி உள்ளிட்ட பகுதிகளின் வழியாகச் செல்லும் இந்த அம்ரித் பாரத் ரெயில்கள் கூடிய விரைவில் துவங்கவிருப்பதாகவும், இதன் மூலம் பயணிகளின் பயணநேரம் குறைக்கப்படுவதோடு மலிவான விலையில் தரமான சேவை மக்களுக்குக் கிடைக்கும் எனவும் வெளியாகியுள்ள தகவல்கள், தமிழகத்திற்கான தித்திப்பான பொங்கல் பரிசு என்பதில் துளியும் ஐயமில்லை. என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story