திருச்சியில் 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்


திருச்சியில் 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்
x

வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொள்ளிடம் டோல்கேட்,

விபத்தில் சிக்கிய தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பஸ்சை மீட்டுக்கொண்டு மீட்பு வாகனம் ஒன்று பெரம்பலூரில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே கூத்தூர் மேம்பாலத்தில் வந்தபோது, அதே திசையில் வெல்ல மூட்டைகள் ஏற்றி வந்த லாரி பஸ்சின் பின்னால் மோதியது.

தொடர்ந்து லாரிக்கு பின்னால் வந்த மற்றொரு லாரியும் விபத்துக்குள்ளான லாரியின் பின்னால் மோதி கண் இமைக்கும் நேரத்தில் அடுத்து விபத்து ஏற்பட்டது. இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் 3 கிலோ மீட்டர் தொலைவு வரை அணிவகுத்து நின்றது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு விபத்துக்குள்ளான வாகனங்களை ஒவ்வொன்றாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story