திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் - போலீஸ் விசாரணை


திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் - போலீஸ் விசாரணை
x

முன்பதிவுல்லா பெட்டியில் பயணிகள் இருக்கைக்கு அடியில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

திண்டுக்கல்,

கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது அந்த ரெயிலில் திண்டுக்கல் ரெயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி உத்தரவின் பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் காவலர்கள் சக்திசண்முகம், மதுரைவீரன், செந்தில்குமார், மதன்ராஜ் ஆகியோர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின்போது முன்பதிவுல்லா பெட்டியில் பயணிகள் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பையை திறந்து பார்த்தபோது, அதில் சுமார் 4 கிலோ 400 கிராம் எடை அளவிற்கு கஞ்சா போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. அதனை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story