புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட 480 மதுபாட்டில்கள் பறிமுதல் - 2 பேர் கைது

கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட 480 மதுபாட்டில்கள் பறிமுதல் - 2 பேர் கைது
Published on

விழுப்புரம் மாவட்டம் கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து வந்த காரை மறித்து போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து காரில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து காரில் கடத்தி வரப்பட்ட 480 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், காரில் வந்த சுகுந்தன் (வயது 24), தீபக் (வயது 20) ஆகிய இரு இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com