நெல்லையில் 5,330 பேருக்கு இரட்டை வாக்காளர் பதிவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது - மாவட்ட நிர்வாகம் தகவல்


நெல்லையில் 5,330 பேருக்கு இரட்டை வாக்காளர் பதிவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது - மாவட்ட நிர்வாகம் தகவல்
x

நெல்லையில் 68,745 வாக்காளர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நெல்லை,

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி(எஸ்.ஐ.ஆர்.) தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெல்லையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர். பணியின் மூலம் 5,330 பேருக்கு இரட்டை வாக்காளர் பதிவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நெல்லையில் 68,745 வாக்காளர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் இரட்டை பதிவு, இறப்பு போன்றவைகளில் அடங்கும் வாக்காளர்கள் 8.60% சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இரட்டை வாக்காளர் பதிவுகள், இறந்தவர்கள் ஆகியோரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story