எழும்பூர் ரெயில் நிலையத்தில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்


எழும்பூர் ரெயில் நிலையத்தில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்
x

சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து சென்னை எழும்பூர் வழியாக திருச்சி செல்லும் சிறப்பு வாராந்திர ரெயில், நடைமேடை 6-ல் வந்து நின்றது. அதில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். உடனடியாக அவர் வைத்திருந்த பெட்டியை சோதனை செய்தனர். அதில் 7 கிலோ கஞ்சா இருந்தது.

விசாரணையில், கஞ்சா கடத்தி வந்தது மேற்கு வங்காளத்தை சேர்ந்த பினாய் சேத்ரி (வயது 32) என்பதும், மேற்குவங்க மாநிலம் கரக்பூரில் இருந்து கஞ்சா வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா கடத்தி வந்த நபரையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவையும் ரெயில்வே பாதுகாப்பு படையினர், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

1 More update

Next Story