சாதம் வடித்த கொதிநீரில் தவறி விழுந்த 3 வயது குழந்தை உயிரிழப்பு


சாதம் வடித்த கொதிநீரில் தவறி விழுந்த 3 வயது குழந்தை உயிரிழப்பு
x

சாதம் வடித்த கொதிநீரில் தவறி விழுந்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

மதுரை,

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள குன்னாரம்பட்டியை சேர்ந்தவர் கேப்டன் பிரபாகரன். இவருடைய மனைவி அன்னக்கிளி. இவர்களுக்கு 3 குழந்தைகள். இந்த நிலையில் மாட்டுப்பொங்கல் அன்று சாதம் வடித்த கொதிநீரை அன்னக்கிளி அருகில் வைத்திருந்தார்.

அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த அவருடைய மகன் நிவிநேஷ் (வயது 3) எதிர்பாராதவிதமாக கொதிநீரில் தவறி விழுந்தான். இதில் உடல் வெந்து அலறி துடித்தான். உடனடியாக அவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நிவிநேஷ் பரிதாபமாக இறந்தான். இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story