நெல்லையில் சர்வ சாதாரணமாக உலா வரும் கரடி... வீடியோ


நெல்லையில் சர்வ சாதாரணமாக உலா வரும் கரடி... வீடியோ
x
தினத்தந்தி 25 April 2025 7:03 PM IST (Updated: 25 April 2025 7:03 PM IST)
t-max-icont-min-icon

ஏற்கனவே கரடி ஒன்று பிடிக்கப்பட்ட நிலையில் அதே பகுதியில் மீண்டும் கரடி சுற்றித்திரிவது குறித்து வீடியோ வெளியானது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் அம்பை அடுத்து கல்லிடைக்குறிச்சி நெசவாளர் காலனி பகுதியிலுள்ள கோவில் வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒற்றை கரடி சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஒற்றை கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் விட்டனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் அதே பகுதியில் கரடி ஒன்று சுற்றித்திரிந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கோவில் வளாகத்தில் கரடி சுற்றித்திரிந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story