விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது - கமல்ஹாசன்

நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் மட்டுமல்ல.. நடிக்க வந்தாலும் விமர்சனங்கள் எழும் என கமல்ஹாசன் பேசினார்.
சென்னை,
ம.நீ.ம. தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது;
“நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் மட்டும் விமர்சனங்கள் எழுவதில்லை. நடிக்க வந்தாலும் விமர்சனங்கள் எழும். விஜய்க்கு கூடுகிற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது. அது அனைத்து தலைவர்களுக்கும் பொருந்தும். இது விஜய்க்கும் பொருந்தும். எனக்கும் பொருந்தும். நல்ல பாதையில் செல்லுங்கள், தைரியமாக முன்னேறுங்கள். மக்களுக்காக செய்யுங்கள் என்பதுதான் நான் எல்லா அரசியல்வாதிகளுக்கும் வைக்கும் வேண்டுகோள். நான் குடிமகனாக இருந்தாலும் இதே வேண்டுகோளைதான் முன்வைத்திருப்பேன்.”
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story






