மதுபோதையில் தகராறு; காய்கறி வெட்டும் கத்தியால் தம்பியை குத்திக்கொன்ற அண்ணன் - சென்னையில் பரபரப்பு


மதுபோதையில் தகராறு; காய்கறி வெட்டும் கத்தியால் தம்பியை குத்திக்கொன்ற அண்ணன் - சென்னையில் பரபரப்பு
x

சரண் உயிரிழந்த நிலையில், அவரது அண்ணன் தினகரன் போலீசில் சரணடைந்தார்.

சென்னை,

சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் ஆட்டோர் ஓட்டுநர் தினகரன். இவரும், இவரது தம்பி சரணும் ஒன்றாக சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியுள்ளது. இதனால் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தினகரன், காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து தனது தம்பி சரணை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சரணை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்நிலையில், தம்பியை கொலை செய்த தினகரன் போலீசில் சரணடைந்தார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


1 More update

Next Story