தமிழகத்தில் கனிம சோதனைக்கான ஆய்வகம் அமைக்க வேண்டும் - திருமாவளவன்

நாம் அகழாய்வுகளை செய்து அறிக்கை தயார் செய்து கொண்டே இருப்போம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கீழடி அகழாய்வு ஆய்வறிக்கையை அங்கீகரிக்க மறுத்த மத்திய அரசை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உரையாற்றினார். அப்போது தமிழகத்தில் கனிம சோதனைக்கான ஆய்வகம் அமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இது குறித்து அவர் கூறியதாவது;-
"தமிழகத்தில் கனிம சோதனைக்கான(Carbon Dating) ஆய்வகத்தை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும். இதற்கான செலவு ரூ.40-45 கோடிதான் ஆகும். ஆய்வு செய்யப்பட வேண்டிய பகுதிகளில் நாம் அகழாய்வுகளை செய்து அறிக்கை தயார் செய்து கொண்டே இருப்போம். மத்திய அரசின் தொல்லியல்துறை அதை ஏற்கும்போது ஏற்கட்டும்."
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story