சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல்.. தமிழ்நாடெங்கும் பொங்கட்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல்.. தமிழ்நாடெங்கும் பொங்கட்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

சாதி பேதம் கிடையாது. மத வேறுபாடுகள் கிடையாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் திருநாள் என்பது தமிழர்கள் அனைவருக்குமான திருவிழா. அதில் சாதி பேதம் கிடையாது. மத வேறுபாடுகள் கிடையாது. ஏழை பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு கிடையாது. பெண் - ஆண் என்ற பாகுபாடு கிடையாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது மற்றொரு பதிவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

தமிழர்களின் கலைத்திறனைக் காட்டும் பாரம்பரியக் கலைகள் அரங்கேறும் சென்னை சங்கமம் நிகழ்வை உங்களில் ஒருவனான நான் ஜனவரி 14ம் தேதி அன்று தொடங்கி வைக்க இருக்கிறேன். நம் மண்ணின் மரபார்ந்த நாட்டுப்புறக் கலைவடிவங்களையும் கலைஞர்களையும் ஆதரித்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story