சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்


சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்
x

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

பெங்களூரு,

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள ெசய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில் (ஒரு பயணம்) இயக்கப்பட உள்ளது. அதன்படி எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06571) இன்று (சனிக்கிழமை) மதியம் 3 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும். மறுமார்க்கமாக திருவனந்தபுரம் வடக்கு-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு சிறப்பு ரெயில் (06572) நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு பெங்களூருவை வந்தடையும்.

இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆல்வா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவள்ளா, செங்கனூர், காயன்குளம், கொல்லம், வர்க்கலா ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் ஒரு முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி, ஒரு இரண்டு அடுக்கு ஏ.சி. பெட்டி, 5 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள், 7 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 6 பொதுப்பெட்டிகள் என மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story