சென்னை விமான நிலையத்தில் நீண்ட நேரம் கேட்பாரற்று கிடந்த சூட்கேசால் பரபரப்பு

சோதனையில் சூட்கேசில் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்று வழக்கம்போல் பயணிகளின் அன்றாட போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு டிராலி ஒன்றில் ஒரு சூட்கேஸ் நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது. யாரும் அந்த சூட்கேசை எடுக்காததால் விமான நிலைய அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
சூட்கேசில் ஏதேனும் மர்மப் பொருள் உள்ளதா என அச்சம் எழுந்ததால், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அந்த சூட்கேசை மோப்ப நாய் உதவியுடன் பரிசோதனை செய்தனர். இந்த சோதனையில் சூட்கேசில் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் நிம்மதியடைந்தனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story






