திடீரென கழன்று ஓடிய டயர் - லாரி மீது நேருக்கு நேர் மோதிய ஆட்டோ.. அதிர்ச்சி வீடியோ

கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லன்விளை அருகே 2 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது ஆட்டோவின் டயர் திடீரென கழன்று ஓடியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ தூக்கி விசப்பட்டு அதில் இருந்த 3 பேரும் காயமடைந்தனர். இதில் ஒருவர் மட்டும் லாரியின் கீழ் தூக்கி வீசப்பட்டார்.
இதனிடையே ஆட்டோ மோதியதில் முன்னதாக சுதாரித்துக்கொண்ட லாரி டிரைவர் வாகனத்தை உடனடியாக நிறுத்தினார். இதனால லாரியின் கீழ் தூக்கி வீசப்பட்ட நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்த 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் விபத்து தொடர்பாக அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






