ரோகித் சர்மா குறித்து மனம் திறந்த அபிஷேக் சர்மா!


ரோகித் சர்மா குறித்து மனம் திறந்த அபிஷேக் சர்மா!
x

ரோகித் சர்மா இந்திய அணிக்காக அதிக பங்களிப்பை கொடுத்துள்ளதாக அபிஷேக் சர்மா கூறியுள்ளார்.

நாக்பூர்,

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 78 ரன்கள் சேர்த்து, அணியின் ஸ்கோர் உயர முக்கிய பங்காற்றினார். அத்துடன் அந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மாவை அபிஷேக் சர்மா நினைவுகூர்ந்துள்ளார். ரோகித் குறித்து அபிஷேக் சர்மா பேசியதாவது;

“ரோகித் சர்மா இந்திய அணிக்காக அதிக பங்களிப்பை கொடுத்துள்ளார். அவரை போல விளையாட வேண்டும் என பயிற்சியாளர்களும், கேப்டனும் என்னிடம் கேட்டுக் கொண்டனர். அவரைதான் நான் பின்பற்றுகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story