பதிவு செய்யாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை

போலி மருத்துவர் தொடர்பான புகார்களை இணைதளம் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பதிவு செய்யாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை
Published on

சென்னை,

தமிழகத்தில் மருத்துவமனைகள், மருத்துவ நிறுவனங்கள் ஆகியவை கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என தமிழக அரசின் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதன்படி tncea.dmrhs.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மருத்துவமனைகளை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் பதிவு செய்யாத மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், போலி மருத்துவர் தொடர்பான புகார்களை tncea.dmrhs@gmail.com என்ற இணைதளம் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com