தூத்துக்குடி-மைசூரு, நாகர்கோவில்-கோவை ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்

கூடுதல் நிறுத்தத்தில் இரு ரெயில்களும் ஒரு நிமிடம் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை,
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊஞ்சலூர் திருவிழாவை முன்னிட்டு தென்னக ரெயில்வே சார்பில் பக்தர்களின் வசதிக்காக எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு தற்காலிக நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16235) வருகிற ஜனவரி மாதம் 6-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ஊஞ்சலூரில் ஒரு நிமிடம் மட்டும் நின்று செல்லும்.
மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.16236) வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை ஒரு நிமிடம் மட்டும் நின்று செல்லும். நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.16321/16322) இரு மார்க்கங்களிலும் வருகிற ஜனவரி மாதம் 6-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ஊஞ்சலூர் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் மட்டும் தற்காலிகமாக நின்று செல்லும்.
Related Tags :
Next Story






