2026-க்குள் அதிமுக ஒன்றிணையும் - சசிகலா நம்பிக்கை

தமிழக மக்களின் நலன் காக்க மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம் என சசிகலா தெரிவித்துள்ளார்.
மதுரை,
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் வி.கே சசிகலா இன்று கலந்துக் கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;
"அதிமுக இப்போதும் பலவீனமாகத்தான் இருக்கிறது. அந்தப் பலவீனத்தைப் போக்குவதுதான் எனது வேலை. இந்தக் கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கலை அனுபவப்பட்டவர்களால் மட்டுமே பிரிக்க முடியும். அ.தி.மு.க. முடிந்துவிட்டதாக நினைக்க முடியாது. காலம் கனிந்துள்ளது. 2026-க்குள் அ.தி.மு.க. ஒன்றிணையும்.
தமிழக மக்களின் நலன் காக்க மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம். தி.மு.க.வை மீண்டும் ஆட்சிக்கு வர விடமாட்டேன். எல்லாமே சர்ப்ரைஸாக நடைபெறும். மீண்டும் அதிமுகவை நான் ஆட்சிக்கு கொண்டு வருவேன். தற்போதைய அரசியல் சிக்கல்களுக்குத் தீர்வு காண தன்னால் மட்டுமே முடியும். நான் என்ன செய்ய இருக்கிறேன் என்பதை பொறுத்தது இருந்து பாருங்கள்."
இவ்வாறு அவர் பேசினார்.






