அமித்ஷா வருகை: மதுரையில் டிரோன்கள் பறக்க தடை


அமித்ஷா வருகை:  மதுரையில் டிரோன்கள் பறக்க தடை
x
தினத்தந்தி 7 Jun 2025 6:03 PM IST (Updated: 7 Jun 2025 6:19 PM IST)
t-max-icont-min-icon

அமித்ஷா, டெல்லியில் இருந்து இன்று மதுரை வருகிறார்.

மதுரை,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று (சனிக்கிழமை) புறப்பட்டு, இரவு 8.30 மணி அளவில் மதுரை வருகிறார். அதன்பின்னர் சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்குகிறார்.நாளை பகல் 11 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பிற்பகல் 3 மணி அளவில் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் பேச இருக்கிறார். இதில் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட தலைவர்கள், பார்வையாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டல நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்பட 15 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமித்ஷா வருகையையொட்டி மதுரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை டிரோன்கள் பறக்க தடை என மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார். தடையை மீறி பறக்க விடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 More update

Next Story