நடுவானில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பழுது; கொச்சியில் அவசரமாக தரையிறக்கம்

Photo Credit: PTI
விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானத்தின் லேண்டிங் கியர் மற்றும் டயரில் பழுது ஏற்பட்டது.
கொச்சி,
சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து கேரளாவின் கோழிக்கோட்டுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 160 பயணிகள் பயணித்தனர். இந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானத்தின் லேண்டிங் கியர் மற்றும் டயரில் பழுது ஏற்பட்டது. இதனைக் கண்டறிந்த விமானி, உடனடியாக அவசரமாக தரையிறக்க விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டார்.
உரிய அனுமதி கிடைத்ததும் விமானம், கொச்சி ஏர்போர்ட்டில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து கோளாறை சீர் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இது குறித்து விமான நிலைய அதிகாரிகள், “ பழுது காரணமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறக்குவது குறித்த தகவல் கிடைத்தவுடன் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. காலை 9.07 மணிக்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தை ஆய்வு செய்ததில், விமானத்தின் வலது பக்கம் உள்ள இரு டயர்களும் வெடித்துள்ளன” என்றன.






