ஸ்ரீரங்கம் கோவிலில் அன்புமணி ராமதாஸ் மனைவியுடன் சாமி தரிசனம்


ஸ்ரீரங்கம் கோவிலில் அன்புமணி ராமதாஸ் மனைவியுடன் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 26 Sept 2025 5:10 PM IST (Updated: 26 Sept 2025 5:40 PM IST)
t-max-icont-min-icon

அன்புமணி ராமதாஸ் இன்று திருச்சியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை சந்திக்கிறார்.

திருச்சி,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு முழுவதும் 100 நாட்களுக்கு ‘தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்’ என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அன்புமணி ராமதாஸ் இன்று திருச்சியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை சந்திக்கிறார்.

இந்த நிலையில், திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் அன்புமணி ராமதாஸ் தனது மனைவி சவுமியா அன்புமணியுடன் சாமி தரிசனம் செய்தார். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

1 More update

Next Story