பள்ளிக்கூட சுவர் சரிந்து விழுந்து ஆந்திர மாநில தொழிலாளி பலி


பள்ளிக்கூட சுவர் சரிந்து விழுந்து ஆந்திர மாநில தொழிலாளி பலி
x

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி குருப்பட்டியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி

தர்மபுரியில் இருந்து கர்நாடகா வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி குருப்பட்டியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டிடங்களை இடிக்கும் பணி நேற்று நடைபெற்றது.

பயன்பாட்டில் இல்லாத 4 கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றியபோது, எதிர்பாராதவிதமாக பள்ளிக்கூட சுவர் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டிடங்களுக்கு இடையே நின்றிருந்த ஆந்திராவைச் சேர்ந்த சீனு (வயது 40) என்ற ஒப்பந்தத் தொழிலாளி இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

1 More update

Next Story