பத்ம பூஷண் விருது பெறும் அஜித்: அண்ணாமலை வாழ்த்து

நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
நாட்டின் குடிமக்களுக்கான உயரிய விருதுகளாக உள்ள பத்ம விருதுகள் பற்றிய அறிவிப்பு வெளியானது. இதில், நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பத்ம பூஷண் விருது பெறும் அஜித்குமாருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ் மற்றும் இந்தியத் திரையுலகின் ஈடு இணையற்ற நடிகர்களில் ஒருவரான, திரு. அஜித் குமார் அவர்கள், நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது பெற்றமைக்கு, பாஜக சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எளிமையான பின்னணியில் இருந்து, தனது மன உறுதியாலும், கடின உழைப்பாலும், பல துறைகளில் சாதனை படைத்து, கோடிக்கணக்கான இதயங்களில் அழியாத முத்திரையைப் பதித்துள்ள நமது 'நாயகனை' அங்கீகரித்ததற்காக, நமது பிரதமர் மோடி அவர்களுக்கு, தமிழக மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.






