மதுரையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்


மதுரையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்
x
தினத்தந்தி 26 May 2025 7:42 AM IST (Updated: 26 May 2025 9:55 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக அவனியாபுரம், ஆனையூர் பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.

மதுரை

மதுரை,

மதுரை அவனியாபுரம் துணை மின்நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே இப்பகுதிக்கு உட்பட்ட டி-மார்ட், கே போர் ஓட்டல், வெள்ளக்கல், பர்மா காலனி, கணேசபுரம், பெருங்குடி அன்பழகன் நகர், மண்டேலா நகர், பி.டி.சி. காவலர் குடியிருப்பு, சின்ன உடைப்பு, குரங்கு தோப்பு, ஆண்டவர் நகர், விமான நிலையம் ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதேபோல அவனியாபுரம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி நடப்பதால் அவனியாபுரம் பஸ் நிலையம், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி முழுவதும், வைகை வீதிகள், சந்தோஷ் நகர், வள்ளலானந்தாபுரம், ஜெ.ஜெ. நகர், வைக்கம் பெரியார் நகர் ரோடு, ரிங்ரோடு, குருதேவ் வீடுகள், காமராஜர் நகர், பாப்பாகுடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

ஆனையூர் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது. எனவே பாலமேடு மெயின் ரோடு, சொக்கலிங்கநகர், பெரியார் நகர், அசோக் நகர், கூடல் நகர், அஞ்சல் நகர், சொக்கநாதபுரம், பாண்டியன் நகர், பாத்திமா கல்லூரி, பாத்திமா கல்லூரி எதிர்புறம், பாரதியார் நகர், பொன் நகர், ஆழ்வார் நகர், ஆசிரியர் காலனி, நேதாஜி மெயின் ரோடு, புது விளாங்குடி, கரிசல் குளம் மெயின் ரோடு, யூனியன் பேங்க் காலனி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story