ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
x

குற்றப்பத்திரிகையை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு மட்டும் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

புதுடெல்லி,

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ந் தேதி அவரது வீட்டிற்கு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்துச் செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரவுடி நாகேந்திரன், பொன்னை பாலு உள்பட 27 பேரை கைது செய்தனர். இதில் ரவுடி நாகேந்திரன் உயிரிழந்துவிட்டார். 2 பேர் வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ளதால், அவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே ‘இந்த வழக்கை போலீசார் சரியாக விசாரிக்கவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல்வாதிகளின் தொடர்பு உள்ளது. எனவே இந்த வழககை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்’ என்று ஆம்ஸ்ட்ராங் சுகோதரர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த மாதம் 24-ந்தேதி உத்தரவிட்டது.

அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை கோரியும், ரத்து செய்யக் கோரியும் தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி. அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றப்பத்திரிகையை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு மட்டும் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

1 More update

Next Story