மருத்துவமனையில் அருள்நிதி: நேரில் சென்று நலம் விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அருள்நிதியின் உடல்நிலை மற்றும் அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
சென்னை,
நடிகரும் மு.க.தமிழரசுவின் மகனுமான அருள்நிதி, படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது ஷூட்டிங்கில் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் சென்னை போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் வலி அதிகரிப்பு காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருள்நிதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் உடல்நிலை மற்றும் அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அவருடன் எம்பி ஆ ராசா உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






