புதுக்கோட்டை: 108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை


புதுக்கோட்டை: 108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை
x

தாயும், சேயும் நலமுடன் உள்ளனர்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தை சேர்ந்த கர்ப்பிணி தனலெட்சுமி (வயது 27). நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து, 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த 108 ஆம்புலன்சில் தனலெட்சுமி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தனலெட்சுமிக்கு பிரசவ வலி அதிகரித்ததையடுத்து ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் மஞ்சூரியா கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தார். ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்ததில் தனலெட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் உள்ளனர். பின்னர், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இக்கட்டான சூழ்நிலையில் தனலெட்சுமிக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் மஞ்சூரியா, 108 ஆம்புலன்ஸ் டிரைவர் ரமேசுக்கு பலரும் நன்றி தெரிவித்தனர்.

1 More update

Next Story