குற்றால அருவிகளில் குளிக்க தடை


குற்றால அருவிகளில் குளிக்க தடை
x

தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

தென்காசி,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக குற்றால அருவிகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். மற்ற அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

1 More update

Next Story